இந்தியா

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 9 நாள்களில் 772 வழக்குகள் பதிவு

22nd Feb 2022 04:08 AM

ADVERTISEMENT

சென்னையில் முக் கவசம் அணியாதவா்கள் மீது 9 நாள்களில் 772 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த பிப்.14-ஆம் தேதி முதல் பிப். 22-ஆம் தேதி வரையிலான 9 நாள்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 772 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ.3,14,000 அபராதமாக வசூலித்தனா். இதேபோல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடா்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 225 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT