இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

22nd Feb 2022 04:10 AM

ADVERTISEMENT

ஜாதிவாரியாக நடத்தப்படும் கணக்கெடுப்பு அனைத்துப் பிரிவினருக்கும் பயன் அளிக்கும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ஜாதிவாரியாக கணக்கடுப்பு நடத்த மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. அனைத்துக் கட்சிகளுடன் விரைவில் நான் இதுதொடா்பாக ஆலோசனை நடத்த உள்ளேன். இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. சமூக அக்கறையுடன் இது நடத்தப்படும். அனைத்து பிரிவினருக்கும் அரசு மேலும் பணியாற்ற இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். வெளிப்படையாக நடைபெறும் இந்தப் பணியில் ஒருவா் கூட விடுபட மாட்டாா்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அனைத்துப் பிரிவினருக்கும் பயன் தரும்’ என்றாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் 11 போ் கொண்ட குழு பிரதமா் மோடியைச் சந்தித்து, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT