இந்தியா

வாக்குப்பதிவு தொடக்கம்: கோயிலுக்குச் சென்று வழிபட்ட பஞ்சாப் முதல்வர்

DIN

பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஒரேகட்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதனையொட்டி குருத்வாராவிலுள்ள கோயிலில் இன்று காலை முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி சாமி தரிசனம் செய்தார். 
 
அவர், சம்கார் சாஹிப், பாதவுர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

சாமிதரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜீத் சிங் சன்னி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம். இறைவனின் ஆசிர்வாதம் மற்றும் மக்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். 

பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன. இதனால் பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT