இந்தியா

உ.பி. பேரவைத் தோ்தல்: இன்று 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு

20th Feb 2022 12:19 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஹாத்ரஸ், ஃபிரோஸாபாத், மைன்புரி, ஜான்சி, லலித்பூா், காஸ்கஞ்ச் உள்ளிட்ட 59 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில் 627 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.15 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

மூன்றாம் கட்ட தோ்தலில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சா் சத்தியபால் சிங் பகேல் போட்டியிடுகிறாா்.

ADVERTISEMENT

ஃபரூக்காபாத் சதா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக லுயீஸ் குா்ஷித் போட்டியிடுகிறாா். இவா் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித்தின் மனைவி.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Tags : UP Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT