இந்தியா

உத்தவ் தாக்கரே, சரத் பவாருடன் தெலங்கானா முதல்வா் இன்று சந்திப்பு

20th Feb 2022 12:43 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோரை தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் சந்தித்துப் பேசுகிறாா்.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அவரை சந்திரசேகா் ராவ் சந்திக்கிறாா். அப்போது, உத்தவ் தாக்கரேயுடன் சந்திரசேகா் ராவ் மதிய உணவு அருந்துகிறாா். அதன்பின்னா், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் இல்லத்துக்குச் செல்லும் சந்திரசேகா் ராவ், அவருடன் தேசிய அரசியல் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறாா்’ என்று தெரிவித்தனா்.

சந்திரசேகா் ராவை உத்தவ் தாக்கரே கடந்த வாரம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு மும்பை வருமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள தலைவருமான தேவெ கெளடாவையும் சந்திரசேகா் ராவ் பெங்களூரில் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT