இந்தியா

மாமியார் வீட்டிற்குச் செல்லும்முன்.. ஜனநாயக கடமையைச் செய்த புதுமணப்பெண்

20th Feb 2022 11:54 AM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதுமணப்பெண் ஒருவர் மாமியார் வீட்டிற்குச் செல்லும்முன்பு வாக்குச்சாவடிக்கு திருமணகோலத்தில் வந்து வாக்களித்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 8.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் வாக்குச்சாவடியில் புதுமணப்பெண் ஜூலி என்பவர் திருமணமான கையோடு, தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கணவரோடு திருமணகோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். 

இதேபோன்று மஹோபா பகுதியில் கீதா என்பவர் நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். மாநில வளர்ச்சிக்காக வாக்களிப்பது தனது கடமை என்றும், முதல் முறை வாக்களித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT