இந்தியா

மோடியின் ஆட்சி விளம்பரங்களில் மட்டுமே உள்ளது: பிரியங்கா காந்தி

17th Feb 2022 04:40 PM

ADVERTISEMENT

 

மோடியின் ஆட்சி விளம்பரங்களில் மட்டுமே உள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ‘மோடியின் ஆட்சி விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. நாட்டில் ஆட்சி இல்லை. அது  இருந்திருந்தால் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும், விலைவாசி உயர்வு இருந்திருக்காது. ஆட்சி இருந்திருந்தால், வேலைவாய்ப்பை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அவரது நண்பர்களுக்கு விற்கப்பட்டிருக்காது. ரூ. 2,000 கோடி விளம்பரங்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், ‘ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரண்டும் மதத்தையும் உணர்வுகளையும் தங்களின் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களால் எந்த வளர்ச்சியும் கிடையாது’ எனவும் பிரியங்கா தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT