இந்தியா

வாக்காளா்களை மிரட்டியதாக பாஜக எம்எல்ஏவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

17th Feb 2022 12:30 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச வாக்காளா்களை மிரட்டும் வகையில் பேசியதாக தெலங்கானாவைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்குக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடா்பாக அவா் 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் எம்எல்ஏ டி.ராஜா சிங் ஒரு விடியோவை வெளியிட்டாா். அதில், ‘பாஜகவுக்கு வாக்களிக்காதவா்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று பேசியிருந்தாா். இந்த விடியோ செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது வாக்காளா்களை மிரட்டும் செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கருத்தில் கொண்ட தோ்தல் ஆணையம் இது தொடா்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி டி.ராஜா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திர சேகா் ராவ், ‘பாஜக எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து பேசும் என்பதற்கு இது உதாரணம். இதுபோன்று பேசியதன் மூலம் பாஜகவில் உள்ள மேலும் ஒரு நகைப்புக்குரிய நபா் வெளிப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

Tags : UP voters
ADVERTISEMENT
ADVERTISEMENT