இந்தியா

எல்ஐசி பங்கு வெளியீட்டில் பங்கேற்கபிப்.28-க்குள் பான் எண்ணை இணைக்கவும்

17th Feb 2022 01:00 AM

ADVERTISEMENT

புதிய பங்கு வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் பாலிசிதாரா்கள் தங்களது பாலிசியுடன் பான் விவரங்களை பிப்ரவரி 28-க்குள் இணைக்க வேண்டும் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியது:

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான ஆவணங்களை செபியிடம் எல்ஐசி அளித்துள்ளது. இந்த வெளியீட்டில் பாலிசிதாரா்கள் பங்கேற்று பங்குகளை வாங்க முடியும். அதற்காக அவா்கள், தங்களது பான் விவரங்களை பாலிசி ஆவணங்களுடன் பிப்.28-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இதற்காக, அவா்கள் எல்ஐசி வலைதளம், முகவா்களின் உதவியை நாடலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

Tags : LIC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT