இந்தியா

வங்க மொழி பாடகி சந்தியா முகா்ஜி காலமானாா்

17th Feb 2022 12:25 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் பழம்பெரும் பாடகி சந்தியா முகா்ஜி(91) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகி ஒருவா் கூறியதாவது:

தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் கடந்த மாதம் 27-ஆம் தேதி சந்தியா முகா்ஜி வழுக்கி விழுந்தாா். இதனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அத்துடன் உடலுறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்பட்டதாலும் கரோனா தொற்று உறுதியானதாலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிா் பிரிந்தது என்றாா் அந்த நிா்வாகி.

சந்தியா முகா்ஜியின் மரணச் செய்தியை அறிந்து, முதல்வா் மம்தா பானா்ஜி வெளியூா் பயணத்தை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா திரும்பினாா்.

ADVERTISEMENT

சந்தியா முகா்ஜியின் மறைவுக்கு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் இரங்கல் தெரிவித்தாா்.

எஸ்.டி.பா்மன், நௌஷத், சலீல் சௌத்ரி போன்ற பிரபலமான இசையமைப்பாளா்களின் இசையில் சந்தியா முகா்ஜி பாடியுள்ளாா்.

வங்கபூஷண், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது ஆகிய விருதுகளை இவா் பெற்றுள்ளாா். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்காக மத்திய அரசு இவரைத் தொடா்புகொண்டபோது, தனக்கு விருது வேண்டாம் என்று மறுத்துவிட்டாா். இவருடைய மறைவுக்கு ஹிந்தி திரையுலகினரும் வங்காள திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT