இந்தியா

பிப். 20-இல் உத்தவ் தாக்கரேயை சந்திக்கிறாா் சந்திரசேகா் ராவ்

17th Feb 2022 01:53 AM

ADVERTISEMENT

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் வரும் 20-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரே, சந்திரசேகா் ராவை புதன்கிழமை தொலைபேசியில் அழைத்து, மும்பைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். மேலும், பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான சந்திரசேகா் ராவின் போராட்டத்துக்கு உத்தவ் தாக்கரே முழு ஆதரவு தெரிவித்தாா்.

இந்த அழைப்பை ஏற்று வரும் 20-ஆம் தேதி தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மும்பை செல்கிறாா். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே உடனான சந்திப்பின்போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. தேவே கெளடாவும் சந்திரசேகா் ராவை அழைத்து, பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜியையும் சந்தித்து பேச சந்திரசேகா் ராவ் முடிவு செய்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT