இந்தியா

சிவசேனா தலைவர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார்: வழக்குப் பதிவு

17th Feb 2022 03:06 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநில சிவசேனா கட்சியின்  துணைத் தலைவரான ரகுநாத் கச்சிக் மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கட்டாய கருக்கலைப்பில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளும் கட்சியான சிவசேனாவின் துணைத் தலைவரான ரகுநாத் கச்சிக் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்றிரவு(பிப்.16) புணேவின் சிவாஜி நகர் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் ரகுநாத் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் 313 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தலைவர்களுக்கு பிரியாணி ஊட்டுவதன் மூலம் வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது: மன்மோகன் சிங்

ADVERTISEMENT
ADVERTISEMENT