இந்தியா

எதிரிகள் சோர்ந்துவிட்டார்கள்: பிரதமர் மோடி

11th Feb 2022 04:34 PM

ADVERTISEMENT


காஸ்கஞ்ச்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த முதல்கட்ட வாக்குப்பதிவில், பாஜக கொடி உயர உயர பறக்கிறது என்றும், எதிரிகள் சோர்ந்துவிட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

காஸ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமரிசித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளைப் பார்த்து, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியானது. இனி, அவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்றார்.

இதையும் படிக்க.. திருப்பூர்: சூட்கேஸில் பெண் சடலம் இருந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் அமைந்துள்ள ரவுண்டானா ஒன்றுக்கு, மறைந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பெயரை சூட்டுவது என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முடிவை பிரதமர் வரவேற்றார்.

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காஸ்கஞ் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு மோடி கூறினார். இந்த தொகுதிக்கு, பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாம் கட்டத் வாக்குப்பதிவன்று தேர்தல் நடைபெற உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT