இந்தியா

நேபால்: பசுபதிநாத் கோயில் இன்று முதல் திறப்பு 

11th Feb 2022 12:02 PM

ADVERTISEMENT

 

நேபாளத்தில் புகழ்பெற்ற இந்து கோயிலான பசுபதிநாத் ஆலயம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை அடுத்து நேபாளத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான பசுபதிநாத் கோயில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. 

கோயிலின் மேம்பாட்டு அறக்கட்டளையின்படி, காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் (டிஏஓ) பிறப்பித்த புதிய உத்தரவின்படி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

பசுபதிநாத் கோயில், குஹ்யேஸ்வரி மற்றும் சந்திராபிநாயக் போன்ற வளாகத்தில் உள்ள மற்ற கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால், மீண்டும் கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT