இந்தியா

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் திலிப் வால்சே

11th Feb 2022 04:26 PM

ADVERTISEMENT

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே வலியுறுத்தியுள்ளார்.

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஹிஜாப் தொடா்பான சா்ச்சை கல்லூரி மாணவா்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. இது பெரும் சா்ச்சையாக உருவெடுத்தது. 

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கா்நாடக அரசு, பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால், மேலும், கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், முதல்நிலை கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க- ஐபிஎல் மெகா ஏலம்: முழு விவரங்கள்

இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் வால்சே கூறியதாவது, முதலில், எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. இருப்பினும் போராட்டம் நடத்தினால் அது அமைதியாக நடத்தப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தூண்டிவிடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமைதியைக் காக்க உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags : hijab row
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT