இந்தியா

நேபாளத்தில் தீ விபத்து: 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

11th Feb 2022 12:43 PM

ADVERTISEMENT

 

நேபாளத்தில் டாங் மாவட்டத்தில் உள்ள ஷூ கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

தீ விபத்து குறித்து துளசிபூர் டிஎஸ்பி ஷியாமு ஆர்யால் கூறுகையில், 

துளசிபூர் பகுதியில் உள்ள ஷூ கடையில் இன்று அதிகாலை 2.00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 7.30 மணியளவில் தீயில் சிக்கி உயிரிழந்த உடல்களை மீட்டனர். இரண்டாவது தளத்தில் 3 உடல்களையும், 4வது தளத்தில் இரண்டு உடல்களையும் மீட்டனர் .

ADVERTISEMENT

இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில் 4 பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். 
உயிரிழந்தவர்கள் 13 வயதான சஜிதா கதுன், ஹசன் பக்ஷ் (14), மசின் பக்ஷ்(15) , நஜர்தீன் அலி (40) மற்றும் அபிதீன் அலி (5) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.  உயிரிழந்த 5 பேரும் மூச்சுத்திணறலால் இறந்துள்ளனர். 

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT