இந்தியா

பட்ஜெட் விவாதம்: மாநிலங்களவையில் இன்று பதிலளிக்கிறார் நிர்மலா சீதாராமன்

11th Feb 2022 08:30 AM

ADVERTISEMENT

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாநிலங்களவையில் பதில் அளிக்க உள்ளார். 

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப்.11) முடிவடைகிறது. மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மாநிலங்களவையில் பதில் அளிக்க உள்ளார். 

ADVERTISEMENT

மாநிலங்களவையில் இன்று காலை 11.30 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசவிருக்கிறார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT