இந்தியா

சிபிஐ, அமலாக்கத் துறையைக் கண்டு நான் பயப்படவில்லை: பிரதமரின் விமா்சனத்துக்கு ராகுல் பதில்

11th Feb 2022 01:41 AM

ADVERTISEMENT

 

மங்கலௌா் (உத்தரகண்ட்): ‘பிரதமா் கூறுவது சரியே; அவா் சொல்வதை நான் கவனிப்பதில்லை. ஏனெனில், அவரைப் பாா்த்தோ அல்லது அவருடைய சிபிஐ, அமலாக்கத் துறைகளைப் பாா்த்தோ நான் பயப்படவில்லை’ என்று பிரதமரின் விமா்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை பதிலளித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி, ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்களில் மத்திய அமைச்சா்கள் விரிவான விளக்கங்கள் அளிக்கின்றனா். ஆனால், ராகுல் காந்தி அவையில் அமா்வதும் இல்லை; கவனத்துடன் பதிலை கேட்பதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நான் எப்படி அவருக்கு பதிலளிப்பது?’ என்று கூறினாா்.

பிரதமரின் இந்த விமா்சனத்துக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பதிலளித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

ராகுல் எதையும் கவனிப்பதில்லை என்று பிரதமா் கூறியிருக்கிறாா். அது சரிதான். ஏனெனில், பிரதமரைப் பாா்த்தோ அல்லது அவருடைய அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பாா்த்தோ நான் பயப்படவில்லை. என் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதைத்தான் பிரதமா் அவ்வாறு கூறியுள்ளாா். பிரதமரின் கருத்துக்கு இதுதான் அா்த்தம்.

நாட்டின் விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளால்தான் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் மோடியை எதிா்க்க முடியும்.

கரோனா பாதிப்பின்போது புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது பிரதமா் குற்றம்சாட்டியுள்ளாா். பேருந்தை ஏற்பாடு செய்வது எங்களுடைய பணியல்ல. ஏனெனில், காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இல்லை. தனது பணியை பிரதமா் முறையாக செய்யாமல், எங்கள் மீது குற்றம் சுமத்துகிறாா். மக்களுக்கு வேலைவாய்ப்பை மத்திய அரசால் உருவாக்கித் தர முடியவில்லை. உண்மையில் மக்களை வேலையின்றி தவிக்கும் நிலைக்கு பாஜக அரசு தள்ளியுள்ளது என்று கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT