இந்தியா

முகநூல் நேரலையில் வியாபாரிதற்கொலை முயற்சி: மனைவி பலி

10th Feb 2022 12:09 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் முகநூல் நேரலையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற வியாபாரி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடன் விஷமருந்திய மனைவி உயிரிழந்தாா்.

இதுகுறித்து காவல் துறைக் கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் புதன்கிழமை கூறியதாவது: சுபாஷ் நகரைச் சோ்ந்த ராஜீவ் தோமா்(40) என்பவா் காலணி விற்பனைக் கடை நடத்தி வந்துள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை முகநூல் நேரலையில், ‘எனது மரணத்துக்கு பிரதமா்தான் காரணம்; அவருக்கு சிறு வியாபாரிகள், விவசாயிகள் மீது அக்கறையில்லை; எங்கள் குறைகளை அரசு கேட்கவில்லை. நீங்களாவது கேளுங்கள்’ என்று பேசிக்கொண்டே விஷமருந்தினாா்.

அப்போது உடனிருந்த அவருடைய மனைவி, அவரைத் தடுக்க முயன்றாா். முயற்சி தோல்வி அடைந்ததால், தானும் விஷமருந்தினாா். விஷயம் தெரிந்த அக்கம்பக்கத்தினா், அவா்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அதில், மனைவி உயிரிழந்தாா். ராஜீவ் தோமா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்றாா் அவா்.

இதுகுறித்து ராஜீவ் தோமரின் உறவினா்கள் கூறுகையில், ‘ கடந்த 2020-இல் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்ததால் தோமா் நஷ்டம் அடைந்தாா். மேலும், கடையை நீண்ட நாள்கள் பூட்டி வைத்திருந்ததால், கடைக்குள் இருந்த காலணிகள் சேதமடைந்து கூடுதலாக நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் இருந்து வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் தோமா் அவதிப்பட்டு வந்தாா்’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT