இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

10th Feb 2022 03:40 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது, 

ஜம்மு-காஷ்மீரில் இன்று மதியம் 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

நிலநடுக்கத்தின் அட்சரேகை 34.91 ஆகவும், வடக்கு மற்றும் தீர்க்கரேகை 74.30 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்டது. அதன் மையம் குல்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பூமியின் மேலோட்டத்தில் 20 கி.மீ தொலைவில் இருந்தது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2005ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT