இந்தியா

பங்குச்சந்தை 203 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்

10th Feb 2022 12:06 PM

ADVERTISEMENT


வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று (பிப்.10) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 10.25 மணியளவில், 0.4 சதவீதம் அல்லது 203 புள்ளிகள் அதிகரித்து 58,669 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமாகியுள்ளது.

நிஃப்டி 0.4 சதவீதம் அல்லது 70 புள்ளிகள் அதிகரித்து 17,533 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

பங்குகளில், ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை முறையே 3.7 சதவீதம், 1.7 சதவீதம், 1.7 சதவீதம், 1.5, சதவீதம் மற்றும் 1.4 சதவீதம் உயர்ந்து முதல் ஐந்து இடங்களைப் பெற்றன.

ADVERTISEMENT

மறுபுறம், மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், கோல் இந்தியா மற்றும் ஐடிசி பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்தன என்று என்எஸ்இ தரவு காட்டுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT