இந்தியா

‘கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி’: காங்கிரஸின் உ.பி. தேர்தல் அறிக்கை

9th Feb 2022 02:27 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கே.ஜி. முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் முதல்கட்ட தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா பேசியதாவது:

“பள்ளிக் கட்டணம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். 2 லட்சம் ஆசிரியர்கள் காலியிடம் நிரப்பப்படும். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மழலை வகுப்பு முதல் முதுநிலை வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஆட்சிக்கு வந்து 10 நாள்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். மின்சாரக் கட்டணத்தை தள்ளுபடி செய்வோம். கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும். 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை உதவி வழங்கப்படும். மாட்டின் சாணத்தை ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசால் பெற்றுக் கொள்ளப்படும்.”

 

ADVERTISEMENT
ADVERTISEMENT