பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் உள்நாட்டு போரை நோக்கி நாடு சென்றுகொண்டுள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் நிறுவனரும் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை பெரிதாகிவரும் நிலையில், அது தொடர்பாக பேசிய லாலு பிரசாத் யாதவ்,
படிக்க | ஹிஜாப் விவகார வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவு
''நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கீழ் நாடு உள்நாட்டுப் போரை சந்திக்கவுள்ளது.
பணவீக்கத்தைப் பற்றியோ, வறுமைநிலையைப் பற்றியோ அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் அயோத்தியாவைப் பற்றியும் வாராணசியைப் பற்றியும் பேசுவார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பதற்றத்தில் பாஜக உள்ளது. அவர்களால் கலவரம் மற்றும் கோயில்களைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.
படிக்க | ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் காங்கிரஸ் எம்.பி.
70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் இங்கிலாந்துக்காரர்களை விரட்டினர். தற்போது பாஜக வடிவில் இங்கிலாந்துக்காரர்கள் ஆட்சி நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு எனது ஆதரவு உண்டு'' என்று கூறினார்.