உஜாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 43 லட்சம் எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எரிசக்தித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு, மின்சாரத்தை சிக்கனமாக செலவிடாத சாதனங்களுக்கு பதிலாக மின் சிக்கன சாதனங்களை மாற்றியமைக்கும் வகையில் உஜாலா என்னும் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின் சிக்கன எல்இடி பல்புகள், குழல் விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் திட்டம் தொடங்கிய 7 ஆண்டுகளில் தமிழகத்தில் 43 லட்சத்து 62,928 எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.227 கோடியும், அதிக மின்தேவையான நேரத்தில் 113 மெகாவாட் மின்சாரமும் சேமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக 11 லட்சத்து 25,400 எல்இடி பல்புகள் விற்பனையாகியுள்ளன என்றனா்.