இந்தியா

‘ஆட்சியைக் கவிழ்க்க சொல்லி தொடர்பு கொண்டார்கள்’: சிவசேனை எம்பி பரபரப்பு கருத்து

9th Feb 2022 04:09 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்க தன்னை சிலர் தூண்டுவதாக சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனை கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை தலைமையிலான மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்க தன்னை சிலர் தூண்டுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை

அக்கடிதத்தில் மத்திய அரசின் நிறுவனங்களான அமலாக்கத்துறை மற்றும் இதர அமைப்புகள் சிவசேனை கட்சியின் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

துணைக் குடியரசுத் தலைவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கும் இந்தக் கடிதத்தை சஞ்சய் ரெளத் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | ‘கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி’: காங்கிரஸின் உ.பி. தேர்தல் அறிக்கை

இதுதொடர்பாக பேசிய சஞ்சய் ரெளத், இதுவெறும் தொடக்கம்தான் எனவும் விரைவில் பாஜகவின் குற்றவாளிக் கூட்டணியான அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் ஒரு மாத காலத்திற்கு முன்பாக, தன்னை தொடர்பு கொண்ட சிலர் மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்க தன்னைத் தூண்டியதாகவும், மீண்டும் தேர்தலை நடத்த தன்னை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயற்சித்ததாகவும் பரபரப்பு கருத்தை சஞ்சய் ரெளத் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT