இந்தியா

கரோனாவால் இறந்த 1,616 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.808 கோடி நிதியுதவி: மத்திய அரசு தகவல்

9th Feb 2022 10:17 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி இறந்த, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,616 சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.808 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை கூறினார். 

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மாண்டவியா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் .

அதில், கரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மார்ச் 30, 2020 அன்று தொடங்கப்பட்டது, இது சமூக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நேரடித் தொடர்பில் இருந்த தனியார் சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 50 லட்சம் முதல் 22.12 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதலாக தனிப்பட்ட விபத்துக் காப்பீடு வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. 

சுகாதாரம் மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளதால், கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை ஒரு சில மாநிலங்களே 
இறப்பு குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன.  

ADVERTISEMENT

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளிக்கும் பாதிப்பு மற்றும் இறப்புகளின் தரவை மத்திய அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,616 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிக்க | கடந்த 5 ஆண்டுகளில் 655 என்கவுண்டர்கள் நடந்துள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

அதில், "இதுவரை மகாராஷ்டிரத்தில் 67 மருத்துவர்கள், 19 செவிலியர்கள் இறந்துள்ளனர். குஜராத்தில் 20 மருத்துவர்கள், 20 செவிலியர்கள், 6 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் 128 துணை மருத்துவ பணியாளர்கள் இறந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

மேலும் மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 1,616 சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதில், மகாராஷ்டிரத்தில் 201 பேருக்கு ரூ.100.5 கோடியும், ஆந்திரத்தில் 160 பேருக்கு ரூ.80 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் 134 பேருக்கு ரூ.67 கோடியும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாண்டவியா கூறினார்.

மேலும் தொற்றை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 20, 2021 அன்று 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்று மாண்டவியா கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT