இந்தியா

ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை

9th Feb 2022 04:01 PM

ADVERTISEMENT

 

ஹிஜாப் விவகாரத்தின் எதிரொலியாக பெங்களூருவிலுள்ள பள்ளி, கல்லூரி அருகே போராட்டங்கள் நடத்துவதற்கு அடுத்த 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள 200 மீட்டர் பகுதிக்கு எந்தவித போராட்டங்களும் நடைபெறக் கூடாதென பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார். 

படிக்க'விருப்பமான உடையணிவது பெண்களின் உரிமை' - பிரியங்கா காந்தி

ADVERTISEMENT

கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதனைத் தடுக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க | ஹிஜாப் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை: கர்நாடக அமைச்சர்

இந்நிலையில் பெங்களூரு நகரில் போராட்டம் நடத்துவதற்கும், குழுவாக கூடுவதற்கும் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட் தடை விதித்துள்ளார். 

மேலும், பள்ளி, பியூ கல்லூரி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களைச் சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளார். இந்த தடை அடுத்த இரண்டு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT