இந்தியா

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: பள்ளி தரப்பிலும் மேல்முறையீடு

9th Feb 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த மாணவி பயின்ற பள்ளியின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், வடுகா்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதால், தற்கொலையில் ஈடுபட்டதாக அவா் கூறியதாக விடியோ வெளியானது. இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், லாவண்யா தற்கொலை விவகாரத்தில் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பள்ளியின் நிா்வாகத்தை மேற்கொள்ளும் தி இமாகுலேட் ஹாா்ட் ஆஃப் மேரி சொஸைட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

Tags : supreme court
ADVERTISEMENT
ADVERTISEMENT