இந்தியா

சினிமா பாணியில் காவலர்களை விரட்டிய திருட்டுக் கும்பல்

2nd Feb 2022 02:52 PM

ADVERTISEMENT


பிரதாப்கார்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியில், திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்யச் செய்த காவலர்கள், ஒரு கும்பல் அடித்து ஓட ஓட விரட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருடனைப் பிடிக்கச் சென்று, திருட்டுக் கும்பலிடம் மாட்டிக் கொண்டதால், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மூன்று காவலர்கள் தப்பியோடி வந்துள்ளனர்.  அவர்களை அந்தக் கும்பல் சுமார் 2 கிமீ தூரம் விரட்டியடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருடன் மற்றும் அந்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் தாக்கி, விரட்யடித்த கும்பலைப் பிடிக்க தனிப்படை அடைக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT