இந்தியா

25 ஆண்டுகளை இலக்காகக் கொண்ட பட்ஜெட்: நிதியமைச்சர்

1st Feb 2022 11:20 AM

ADVERTISEMENT

 

அடுத்த 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான அவர், தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

அப்போது உரையாற்றிய அவர், அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கரோனா பரவல் குறைந்துள்ளது என்றார். 

தொடர்ந்து துறை ரீதியாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT