இந்தியா

ராஜஸ்தானில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

1st Feb 2022 03:44 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல மாநிலங்களில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கத் தொடங்கியுள்ளன. 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கரோனா வழிகாட்டுதலுடன் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

ADVERTISEMENT

6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT