இந்தியா

வருமான வரி கணக்குத் தாக்கலில் திருத்தம் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம்: நிதியமைச்சர்

1st Feb 2022 12:27 PM

ADVERTISEMENT

வருமான வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது பேசிய அவர்,  வருமான வரி செலுத்துவபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கலில் தவறு இருந்தால் அதனை திருத்தம் செய்யலாம். 

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. 

ADVERTISEMENT

கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கும் திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT