இந்தியா

மத்திய பட்ஜெட்: 75 மாவட்டங்களில் இ-பேங்கிங்; வங்கிகளுடன் தபால் நிலையங்கள் இணைப்பு

1st Feb 2022 11:54 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இ-பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது உரையாற்றிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் புதிதாக இ-பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும். எண்ம(டிஜிட்டல்) பணபரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு எண்ம பணபரிவர்த்தனை மையங்கள் ஏற்படுத்தப்படும்

நாட்டில் அனைத்துத் துறைகளும் மின்னணுமயமாக்கப்படும். வங்கி சேவையுடன் தபால்துறை சேவைகளும் இணைக்கப்படும். 

ADVERTISEMENT

நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும் என்றார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT