இந்தியா

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 91.50 குறைப்பு

1st Feb 2022 04:26 PM

ADVERTISEMENT

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ. 91.50 குறைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தில்லியில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ. 1, 907 ஆகும். 

அதுபோல கொல்கத்தாவில் ரூ. 1,987, மும்பையில் ரூ. 1,857, சென்னையில் ரூ. 2,080.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று(பிப்.1)முதல் இந்த விலை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ADVERTISEMENT

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதியும்  வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 102.50 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT