இந்தியா

மத்திய பட்ஜெட்: விவசாயத்துறையில் முக்கிய அறிவிப்புகள்!

1st Feb 2022 12:07 PM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

விவசாய நிலங்களை அளவிடவும் விவசாய உற்பத்தியை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். 

ADVERTISEMENT

ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

விவசாயிகளிடம் இருந்து கடந்த ஆண்டு ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு மூலம் எளிதாக வசதி ஏற்படுத்தப்படும்.

ஸ்டார்ட்அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும்.

ரூ. 44,605 கோடி மதிப்பிலான கென் - பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும். 

இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள் மற்றும் சிறு  தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுபடுத்தப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT