இந்தியா

உபி: ரூ.41 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் கைது

1st Feb 2022 12:46 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.41 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னௌ அலம்பா கிளை வங்கி மேலாளரான அகிலேஷ்குமார் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதில் மோசடிக்கான காரணமாக, அகிலேஷ் வங்கி மேலாளராக இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த 4 பேர்  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பெயரில் ரூ.41 கோடி நிலையான வைப்புத்தொகையை (FD) பெற விரும்புவதாக தெரிவித்தனர். 

அதன்பின் அவரைச் சந்தித்த மேலும் 4 பேரான - சதீஷ் திரிபாதி, அமித் திவாரி, ஓம் பிரகாஷ் என்ற மேலாளர், மற்றும் பிரபாத் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யுமாறும் வைப்புத் தொகைக்கான கால அவகாசம் முடிவதற்குள் பணத்தைத் திரும்ப செலுத்தி விடுகிறோம் எனக் கூறியதுடன் அகிலேஷ்குமாருக்கு ரூ.1.25 கோடியை அதற்கான லஞ்சமாகவும் கொடுத்தனர்.

ADVERTISEMENT

பணத்தைப் பெற்றுக்கொண்டு 4 பேரின் வங்கிக் கணக்கிற்கும் ரூ.41 கோடியை  மாற்றினார் அகிலேஷ். 

அதாவது, கால அவகாசம் முடிந்து கொடுக்க வேண்டிய பணத்தை லஞ்சம் பெற்றுக்கொண்டு அசல் முதலீட்டாளர்களின் தொகையை  எந்த நம்பிக்கையில் திருப்பிப் கொடுப்பார்கள் என நினைத்து வேறு சிலருக்குக் கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டார். பின் சில நாள்கள் கழித்து குற்றம் உறுதிசெய்யப்பட்டதும் அகிலேஷ்குமார் தலைமறைவானார்.

தற்போது 2 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT