இந்தியா

அண்டை நாடுகளின் நட்புறவுக்காக பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது: ராஜ்நாத் சிங்

30th Dec 2022 03:34 PM

ADVERTISEMENT

இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பதை விரும்புவதாகவும், அதற்காக இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப் பயணக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாங்கள் எங்களது நண்பர்களை மாற்ற முடியும். ஆனால், அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அதனால் நாங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல நட்பு ரீதியிலான உறவினை கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும், அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பதுக்காக இந்தியா ஒருபோதும் அதன் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாது. நாட்டின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம்.

இதையும் படிக்க: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் விபத்து: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

ADVERTISEMENT

மத்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டம் கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது. சுயசார்பு இந்தியா திட்டத்தினால் இந்தியா உலக அளவில் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ராணுவமும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க கடினமாக உழைத்து வருகிறது. சிவகிரி மடத்தில் உள்ள துறவிகள் நாட்டின் ஆத்மாவை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த சேவையை நான் பாராட்டுகிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT