இந்தியா

விபத்தில் சிக்கிய ரிஷப் பந்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: புஷ்கர் தாமி

30th Dec 2022 12:47 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த், தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகண்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் வெள்ளிக்கிழமை அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. 

இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் எற்பட்டது. படுகாயங்களுடன் ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 (மேஷம் - கன்னி)

இந்நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT