ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியா குமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்றுவிட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இஷா ஆலியா என்று திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியா குமாரி. இவர் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிக்க.. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
இந்த நிலையில், பிரகாஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் அவரை கைது செய்த காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குழந்தையிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மிக முக்கிய துப்பு கிடைத்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க.. பிரபல நடிகையை சுட்டுக் கொன்று நாடகமாடிய கணவர்: காட்டிக்கொடுத்த குழந்தை
விசாரணையில், மனைவி தன்னை மதிக்காததால், அவளை சுட்டுக் கொன்றுவிட்டு, கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடியதையும் ஒப்புக் கொண்டார்.