இந்தியா

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி!

30th Dec 2022 10:53 AM

ADVERTISEMENT

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக பருவமழை பெய்யாத நிலையில் இரவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. 

பகலில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவு இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் குறைவான வேகத்திலேயே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

மேலும் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டே செல்கின்றனர். மேலும், காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் என மக்கள் குறைவாகவே காணப்பட்டனர்.

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT