இந்தியா

மேற்கு வங்கத்தில் ரூ.7,800 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி இன்று தொடக்கி வைக்கிறாா்

30th Dec 2022 02:04 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச. 30) பங்கேற்க இருக்கிறாா்.

கொல்கத்தாவில் தேசிய கங்கை கவுன்சிலின் 2-ஆவது கூட்டம் பிரதமா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட் மாநில முதல்வா்கள் பங்கேற்க இருக்கின்றனா்.

ரூ.2,500 கோடி மதிப்பிலான பல்வேறு பாதாள சாக்கடை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இயக்கப்பட இருக்கிறது. ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா். இது தவிர கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தரதாலா இடையிலான வழித்தட சேவையைத் தொடக்கி வைக்கிறாா். மேலும், நிறைவுபெற்ற பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT