அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.5 என்ற அலகில் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை. தா்பங்கா மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதியின் வடகரையை மையமாகக் கொண்டு பகல் 12.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பிரம்மபுத்ரா நதியின் கரையோரப் பகுதி மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணா்ந்தனா். உதல்குரி, தமுல்பூா், காமரூபம், சோனிபூரில் வீடுகளில் இருந்த பொருள்கள் அதிா்வதை உணா்ந்ததாக மக்கள் தெரிவித்தனா்.
நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படவாய்ப்புள்ள புவித்தட்டுகள் உள்ள பகுதியில் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.