இந்தியா

டிவிட்டர் செயல்படுவதில் சிக்கல்! பயனர்கள் அவதி

29th Dec 2022 07:52 AM

ADVERTISEMENT

வலைதளத்தில் டிவிட்டர் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் சமூக ஊடகமாக டிவிட்டர் உள்ளது. செயலி வாயிலாகவும், கணினியில் வலைதளம் மூலமாகவும் கிட்டத்திட்ட 30 கோடிக்கும் அதிகமானோர் டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வலைதளத்தில் டிவிட்டர் கணக்கை லாகிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயனர் பெயர் மற்றும் கடவு எண்ணை உள்ளீடு செய்த பின் ‘எரர்’ வருவதால் டிவிட்டரை கணினியில் உபயோகிக்க முடியவில்லை.

இதையும் படிக்க | கரோனா பரவல் அதிகரிக்கலாம்; அடுத்த 40 நாள்கள் முக்கியமானவை: மத்திய அரசு அதிகாரிகள்

பயனர்களின் புகாரைத் தொடர்ந்து சிக்கலை சரிசெய்யும் பணியில் டிவிட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மாஸ்க், டிவிட்டர் கொள்கையில் சீர்திருத்தங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Twitter error
ADVERTISEMENT
ADVERTISEMENT