இந்தியா

ஜன. 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம்! எந்தெந்த நாடுகளுக்கு??

29th Dec 2022 03:32 PM

ADVERTISEMENT

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற ஜனவரி 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்று பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோர் பயணத்திற்கு முன்னதாகவே கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவை மத்திய அரசின் 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!   

ADVERTISEMENT
ADVERTISEMENT