இந்தியா

விரைவில் வருகிறது ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: யாருக்காகத் தெரியுமா?

29th Dec 2022 01:47 PM

ADVERTISEMENT

புது தில்லி: மாநிலத்துக்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று கூலி வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ஒரு முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல தொகுதிகளை உள்ளடக்கிய மின்னணு முன்மாதிரி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிக்க.. நயாகரா நீர்வீழ்ச்சிக்கே இந்த நிலையா? 

ஒரேயொரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் சற்று மேம்படுத்தப்பட்ட பல்லோட் இயந்திரம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்களை அளிக்க ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.4 சதவீத மக்கள்தான் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 30 கோடி பேர் தங்களது வாக்குகளைச் செலுத்தவில்லை. இதனால் கவலை அடைந்த தேர்தல் ஆணையம், வாக்களிப்பை அதிகரிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதையும் படிக்க.. ஒரு டீ, சமோசாவுக்கு இவ்வளவு விலையா? டிவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படம்

அதன்படி, பல வாக்காளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் போகிறது.எனவே, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்க வசதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதே ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

இதையும் படிக்க.. ராகுலுக்கு மட்டும் எப்படி குளிரவில்லை? டி-ஷர்ட் பற்றி என்னென்ன சொல்றாங்க பாருங்க!

நாடு முழுவதும் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. எனவே, வாக்களிப்பை அதிகரிக்க இந்த முன்னெடுப்பை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT