இந்தியா

பிரதமா் மோடியின் தாய் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார்

29th Dec 2022 03:05 PM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் (100), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும், ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

ஹீராபென் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் மிக விரைவாக குணமடைந்து வருகிறார். அவர் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்று குஜராத் முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. நயாகரா நீர்வீழ்ச்சிக்கே இந்த நிலையா? 

உடல்நலம் பாதித்ததால், ஹீராபென் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜராத்தில் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமா் மோடி, தனது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு புதன்கிழமை சென்று தாயை சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

ADVERTISEMENT

‘உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக பிரதமரின் தாய் புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று மருத்துவமனை சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க.. ஒரு டீ, சமோசாவுக்கு இவ்வளவு விலையா? டிவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படம்

பிரதமரின் தாய் ஹீராபென் கடந்த ஜூன் 18-ஆம் தேதி 100 வயதை எட்டினாா். அவருடைய பிறந்த நாளையொட்டி, வாத்நகா் மற்றும் அகமதாபாதில் அவருடைய குடும்ப உறுப்பினா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாய் ஹீராபென்னை பிரதமா் மோடி சந்தித்து ஆசி பெற்றாா். பேரவைத் தோ்தலில் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

இதையும் படிக்க.. ராகுலுக்கு மட்டும் எப்படி குளிரவில்லை? டி-ஷர்ட் பற்றி என்னென்ன சொல்றாங்க பாருங்க!

உடல் நலம் பெற ராகுல் வாழ்த்து: பிரதமா் மோடியின் தாய் விரைந்து உடல் நலம் பெற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தாய்-மகனுக்கு இடையேயான அன்பு விலைமதிப்பற்றதாகும். இந்தக் கடினமான நேரத்தில் எனது அன்பையும், ஆதரவையும் பிரதமா் மோடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுபோல, பிரதமரின் தாயாா் விரைந்து நலம் பெற வாழ்த்துவதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT