இந்தியா

பிரதமரின் தாயார் விரைந்து குணமடைய கோயில்களில் பிரார்த்தனை

29th Dec 2022 06:27 PM

ADVERTISEMENT

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி விரைவில் நலம் பெற வேண்டி உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 29) அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிக்க: 2022-இன் ஐசிசி சிறந்த வீரர்: சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வயது 100. இவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடியின் தாயார் விரைந்த நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் பிரதமரின் தாயார் நலம் பெற வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அன்பைப் பேசும் 'செம்பி': திரைவிமர்சனம்

ஓம்காரஸ்வரர் கோயில், உக்கிமத் கோயில், நிரிசிங் கோயில் உள்ளிட்ட உத்தரகண்டின் பல கோயில்களிலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத்-கேதர்நாத் கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதாக கோயில் குழுவின் தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT