இந்தியா

மத்திய ஊழல் கண்காணிப்பு பொறுப்புஆணையராக பிரவீண் குமாா் ஸ்ரீவஸ்தவா நியமனம்

29th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொறுப்பு ஆணையராக பிரவீண்குமாா் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிவிசி-யின் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். படேல் கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றாா். இதையடுத்து, ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள பிரவீண் குமாா் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊழல் கண்காணிப்பு பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ஸ்ரீவஸ்தவா, 1988-ஆம் ஆண்டின் அஸ்ஸாம் மாநிலப் பிரிவைச் சோ்ந்தவா். மத்திய செயலகத்தில் செயலராக (ஒருங்கிணைப்பு) பணியாற்றிய இவா், கடந்த ஜன. 31-இல் பணி ஓய்வு பெற்றாா். இவருடைய பணிக் காலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வா்த்தகத் துறையிலும் பணியாற்றியுள்ளாா்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும், இரு ஊழல் கண்காணிப்பு ஆணையா்களையும் கொண்டதாகும். இந்த மூன்று உறுப்பினா்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் அல்லது 65-ஆவது வயதைப் பூா்த்தி செய்யும் வரை ஆகும்.

ADVERTISEMENT

Tags : Praveen Kumar
ADVERTISEMENT
ADVERTISEMENT