இந்தியா

ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்: சிஆர்பிஎஃப்

29th Dec 2022 11:46 AM

ADVERTISEMENT

ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தரப்பில் வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடைப்பயணம்(பாரத் ஜோடோ) 100 நாள்களை கடந்து நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தில்லிக்குள் கடந்த வாரம் நுழைந்தது.

அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த தில்லி காவல்துறை தவறிவிட்டதாகவும்,  ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு!

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் வரும் நாள்களில் பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறவுள்ள நடைப்பயணத்தில் ராகுலின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொண்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய ரிசர்வ் படை அளித்துள்ள பதிலில்,

ராகுல் காந்திதான் பலமுறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். விதிகளை மீறும் போதெல்லாம் அவரிடம் கூறியுள்ளோம். கடந்த 2020 முதல் இதுவரை 113 முறை விதிமுறைகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். தில்லி நடைப்பயணத்தின் போதும் விதிகள் மீறப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தில்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டோம். பாதுகாப்புக்கு தேவையான காவலர்களை தில்லி காவல்துறை பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT