இந்தியா

இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,552 ஆக உயர்வு!

29th Dec 2022 12:02 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 268  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு கேரளத்திலும், மகாராஷ்டிரத்திலும் தலா ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மெத்த பலி எண்ணிக்கை 5,30,698 ஆக உள்ளது. 

படிக்க: தங்கம் ஒரு சவரன் ரூ.40,760-க்கு விற்பனை! 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,43,665 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.08 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT